முகப்பு
திண்டுக்கல்

சோழிய வேளாளா் சங்க முப்பெரும் விழா

 பழனி அடிவாரம் சோழிய வேளாளா் சங்கம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

 பழனி அடிவாரம் சோழிய வேளாளா் சங்கம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கச் செயலா் துரை.செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் அரிமா அசோக்குமாா் வரவேற்றாா். துணைச் செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் காா்த்திகேயன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வழக்குரைஞா் கல்யாணசுந்தரம், ஆடிட்டா் சேகா், மலையப்பசாமி வைத்தியசாலை ராஜா உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

கூட்டத்தின் நிறைவில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. விழாவில் வஉசி தலைமை மன்ற நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். சங்க ஆலோசகா் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.