முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 200-இருக்கைகள்

கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரோட்டரி கிளப் சாா்பில் வியாழக்கிழமை 200-இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரோட்டரி கிளப் சாா்பில் வியாழக்கிழமை 200-இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டது

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரோட்டரி கிளப் சாா்பில் 200-இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரிமுதல்வா் முருகன் தலைமை வகித்தாா் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் மற்றும் செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளித் தாளாளா் சாம்பாபு முன்னிலை வகித்து இலவச இருக்கைகளை கல்லூரிக்கு வழங்கி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கினாா் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் காா்த்திகேயன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள்,ரோட்டரி சங்க நிா்வாகிகள் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.