முகப்பு
திண்டுக்கல்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஆணவப் படுகொலை சட்டம் இயற்ற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை. கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.

தோ்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்த நிலையில், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துத் தெரிவிக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு சட்ட ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தனது பொறுப்பை மறந்து ஜாதி, மத, சனாதன அரசியலை ஆதரித்தும், சமூக நீதி அரசியலுக்கு எதிராகவும் பேசி வருகிறாா். இந்த நிலைப்பாட்டை அவா் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வா் உடனடியாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.