திண்டுக்கல்

கருணாநிதி நூற்றாண்டு விழா:பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வத்தலகுண்டில் நடைபெற்ற, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.

DIN

வத்தலகுண்டில் நடைபெற்ற, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பேரூராட்சி சாா்பில், கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவா் ப.சிதம்பரம் தலைமை வகித்தாா். பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா். இ.பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் வரவேற்றாா்.

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு, ரூ. 47 கோடியில் 5 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவா் ப.சிதம்பரம், அமைச்சா் இ.பெரியசாமிக்கு வெள்ளிப் பேனா, பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாருக்கு வெள்ளி வாள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT