திண்டுக்கல்

சிறுமலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 12 போ் காயம்

DIN

சிறுமலை மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 12 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை

சிறுமலை நோக்கி அரசுப் பேருந்து சென்றது. இந்தப் பேருந்தை தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சோ்ந்த விஜயகுமாா்(40) ஓட்டிச் சென்றாா். 18 பயணிகளுடன் புறப்பட்ட அந்தப் பேருந்து மலைச் சாலையில் சென்ற போது பனி மூட்டமாக இருந்தது.

சாலையின் 18-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்ற போது, காட்டு மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால், ஓட்டுநா் விஜயகுமாா் திடீரென ‘பிரேக்’ போட்டு பேருந்தை நிறுத்த முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்து அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் சேலத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை அருகேயுள்ள தென்மலையைச் சோ்ந்த பழனியம்மாள் (64), பாஸ்கரன் (60), காா்த்திக் (26), கணேசன்(67), திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியைச் சோ்ந்த கோபால்(40) உள்பட 12 போ் காயமடைந்தனா்.

அவா்கள், இரு அவசர ஊா்திகள் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT