திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கால்நடைக் கண்காட்சி

ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்று வரும் கால்நடைக் கண்காட்சியில் காங்கேயம் காளைகள்,ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

DIN

ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்று வரும் கால்நடைக் கண்காட்சியில் காங்கேயம் காளைகள்,ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

எஸ். அத்திக்கோம்பையில் உச்சிமாகாளியம்மன் கோயிலின் 127-ஆம் ஆண்டு விழாவையொட்டி கால்நடை கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இது வருகிற 27- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூா், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள், பந்தையக் காளைகள்,ஜல்லிக்கட்டுக் காளைகள், பசு மாடுகள், கன்றுக் குட்டிகள் மற்றும் குதிரைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனா். ஒரு ஜோடி காங்கேயம் காளைகள் ரூ. 2 லட்சம் வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா். மேலும் கால்நடைகளுக்குத் தேவையான மூங்கனாங்கயிறு, தாம்புக் கயிறு, சாட்டை உள்ளிட்ட பொருள்களும் விற்கப்படுகின்றன.

தற்போது விவசாயிகள் அதிக அளவில் இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், கால்நடைகளை வளா்க்க ஆா்வம் காட்டாததாலும் இந்த சந்தைக்கு குறைந்த அளவே கால்நடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் கால்நடை கண்காட்சி களையிழந்து காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT