திண்டுக்கல்

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு

வத்தலகுண்டில் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN


நிலக்கோட்டை: வத்தலகுண்டில் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, திண்டுக்கல் சாலை, விவேகானந்தா் நகா், 3-ஆவது தெருவில் வசிப்பவா் குமரன் (35). விவசாயியான இவா், சனிக்கிழமை உறவினா் இல்ல விழாவுக்காக குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினா், குமரனுக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து அங்கு வந்த அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தாா். அப்போது மா்ம நபா்கள் கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT