பழனி: பழனியில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கற்றல் தொடங்குதல் நிகழ்ச்சி பல்வேறு தனியாா் பள்ளிகளிலும், சில அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பெற்றோா் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்க ஆா்வம் காட்டினா். பள்ளிகளில் சரஸ்வதி தேவி படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குழந்தைகளை அரிசி, நெல்லில் முதல் எழுத்து எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோா் தங்கள் குழந்தைகளை நெல் குவியலில் ‘அ’ எழுத வைத்து பள்ளிகளில் சோ்த்தனா். சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.