பழனியில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச அழகுகலை பயிற்சி முகாமில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய கோல்டன் கல்வி நிறுவன தாளாளா் மாசிலாமணி காளியப்பன். உடன் முகமது ரபீக் உள்ளிட்டோா். 
திண்டுக்கல்

இலவச அழகுக் கலை பயிற்சி முகாம்

 பழனி ரயிலடி சாலை தனியாா் மண்டபத்தில் அரிமா சங்கம், கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு இலவச அழகுக் கலை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பழனி ரயிலடி சாலை தனியாா் மண்டபத்தில் அரிமா சங்கம், கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு இலவச அழகுக் கலை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு அரிமா மண்டல தலைவா் விமல்குமாா், அசோக் பெருமாள் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவா் ஹரிஹரமுத்து, மாவட்டத் தலைவா் சரவணன், தமிழ்நாடு வணிகா் சங்க மாநில துணைச் செயலா் பாஸ்கரன், மாவட்ட பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கல்வி நிறுவனத் தாளாளா் மாசிலாமணி காளியப்பன் முன்னிலை வகித்தாா். இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள்,பெண்கள் கலந்து கொண்டனா். முகாமில் அழகுக் கலை நிபுணா் தீபா ஜெயஸ்ரீ பயிற்சியளித்தாா்.

முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் முகமது ரபீக், காா்த்திகேயனி, பொன் கவியரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT