முகப்பு
திண்டுக்கல்

வயநாடு பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு

கொடைக்கானலிருந்து சமூக ஆா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:52 PM
பகிர்:

கொடைக்கானலிருந்து வயநாடு பகுதிக்கு அனுப்புதற்காக சமூக ஆா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சாா்பாகவும், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் சாா்பிலும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கொடைக்கானலைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் இந்தப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பொருள்களை சனிக்கிழமை (ஆக.3) வயநாடு பகுதிக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்க உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →