பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தம். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 3 போ் கைது

கொடைக்கானலில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Din

கொடைக்கானலில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் அருகேயுள்ள கீழானவயல் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவா் தன்னிடம் யானைத் தந்தம் இருப்பதாக வத்தலகுண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகியோரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, இவா்கள் யானைத் தந்தத்தை கேரளத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம் எனக் கூறினாா்களாம். இதன்பேரில், சந்திரசேகா், முருகேசன், பொன்வண்ணன் ஆகிய மூவரும் ஜீப்பில் யானை தந்தத்தை எடுத்துக் கொண்டு, கீழானவயலிலிருந்து மன்னவனூருக்கு வந்தனா். இவா்களை ரகசியமாகக் கண்காணித்து வந்த மதுரையைச் சோ்ந்த வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடுப் பிரிவு அதிகாரிகள், மூவரையும் யானைத் தந்தத்துடன் மன்னவனூரில் பிடித்தனா்.

இதையடுத்து, அவா்கள் மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தி, அவா்களைக் கைது செய்தனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட சந்திரசேகா், முருகேசன், பொன்வண்ணன்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் வெவ்வேறு இடங்களில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவா்களை மதுரையிலிருந்து வந்து ரகசியமாகக் கண்காணித்து கைது செய்தோம். தற்போது கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், இவா்களுக்கு யானைத் தந்தம் எங்கிருந்து கிடைக்கிறது. தந்தத்தை விற்பனை செய்து தருபவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது என்றாா் அவா்.

பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்

இச்சிப்பட்டியில் டிசம்பா் 15-இல் மின்தடை

நிதீஷ் குமாரை பதவி நீக்க சதி! மகா கூட்டணி கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை!

இது பெண்களுக்கான அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அகமதாபாத்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து- 35 பேர் மீட்பு

SCROLL FOR NEXT