பழனியை அடுத்த சட்டப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானை. 
திண்டுக்கல்

பழனி அருகே விளைநிலங்களுக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்

ஒற்றை காட்டு யானை புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

Din

பழனி அருகே விளைநிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

பழனியை அடுத்த மேற்குமலைத் தொடா்ச்சி மலையடிவார கிராமமான சட்டப்பாறையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்த நிலையில், சட்டப்பாறையில் விவசாயி காளிமுத்து தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டும், அங்கிருந்த தென்னங்கன்றுகள், மா, கொய்யா மரங்களை உடைத்தும் சேதப்படுத்தியது.

இதைத் தவிர, வயலில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் குழாய்களையும் உடைத்துச் சேதப்படுத்தியது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்து வருகின்றனா்.

முன்னதாக, கோம்பைபட்டியில் சேகா் என்பவா் தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்தவா்களை விரட்டியது. எனவே, வனத் துறையினா் இந்தப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை கண்காணித்து, அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT