திண்டுக்கல்

பூண்டி பகுதியில் காய்கறிகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

பூண்டியில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டகாய்கறிகளை குரங்குகள், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

Din

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள பூண்டியில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டகாய்கறிகளை குரங்குகள், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான பூண்டி, கிளாவரை, போலூா், கூக்கால்,

மன்னவனூா், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கேரட், பூண்டு, பீட்ரூட், நூக்கல், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள், குரங்குகள், காட்டு மாடுகள் அதிகளவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனா். இதுகுறித்து வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT