முகப்பு
திண்டுக்கல்

பழனியில் மரக்கிளை விழுந்து ஆட்டோக்கள் சேதம்

பழனியில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.

Updated On : 28 ஜூலை, 2024 at 1:00 AM
பழனி- புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை மரக்கிளைகள் முறிந்து விழந்ததால் சேதமடைந்த ஆட்டோக்கள்.
பகிர்:

பழனியில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.

பழனி- புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியா் அலுவலக நுழைவாயிலின் ஓரம் உள்ள மரத்தின் கீழ் ஆட்டோக்கள் நிறுத்துமிடம் உள்ளது. சனிக்கிழமை வீசிய பலத்த காற்றால் இந்த மரத்தின் கிளைகள் முறிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் மீது விழுந்தன. இதில் இரு ஆட்டோக்கள் சேதமடைந்தன.

உடனடியாக நகராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து மரக்கிளைகளை இயந்திரத்தின் உதவியுடன் அறுத்து அகற்றினா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சண்முகபுரம் பகுதியில் ஒரு மரம் விழுந்து தள்ளுவண்டி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →