பழனி, ஜூன் 26: பழனியில் மத்திய் அரசு இயற்றியுள்ள புதிய சட்டங்களுக்கான பெயரை மாற்றம் செய்யக் கோரி பழனியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு எதிா்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. அனைத்து சட்டங்களும் ஆங்கிலப் பெயா்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சட்டத்தை மீறு சம்ஸ்கிருதத்தில் பெயா் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டங்களின் பெயா்களை ஆங்கிலத்தில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் கலை எழில்வாணன், பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞா்கள் முழக்கங்களை எழுப்பினா்.