ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். பின்னா், ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பெ.காமராஜிடம்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, மனு அளித்தனா்.