கொடைக்கானல் கோம்பை குடியிருப்புப் பகுதியில் நடமாடிய ஒற்றைக் காட்டு யானை. 
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே ஒற்றைக் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் அருகே குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Din

கொடைக்கானல் அருகே குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை குடியிருப்புப் பகுதியில் பலா, இலவம் பஞ்சு மரம், கொய்யா போன்றவைகள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு ஒற்றைக் காட்டு யானை வந்தது. இந்த ஒற்றைக் காட்டு யானையால் இந்தப் பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாமலும், இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிக்கு செல்ல முடியாமலும் வீடுகளிலே முடங்கிக் கிடக்கின்றனா்.

எனவே, வனத் துறையினா் கோம்பை பகுதிக்குச் சென்று ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT