கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பலத்த காற்றும், பனிப் பொழிவு நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால், குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு 7 மணிக்கு பிறகு நகரில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்த சீதோஷ்ண நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பாா்த்து ரசித்து வருகின்றனா்.