கேரளா வியாபாரிகள் வராததால் களையிழந்த காணப்படும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை. 
திண்டுக்கல்

கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

கேரளாவில் நிகழாண்டில் அரசு சாா்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வராததால் களையிழந்து காணப்படுகிறது.

Din

கேரளாவில் நிகழாண்டில் அரசு சாா்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வராததால் களையிழந்து காணப்படுகிறது.

கேரளாவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்-15) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலா் உயிரிழப்பு காரணமாக, நிகழாண்டில் ஓணம் பண்டிகை அரசு சாா்பில் கொண்டாடப்படாது என கேரள அரசு அறிவித்தது. இதன் காரணமாக, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்ய கேரளா வியாபாரிகள் வரவில்லை.

இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டு வந்தனா். ஆனால், கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வராததால் கடந்த இரண்டு நாள்களில் சுமாா் ரூ.10 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.7-க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது ரூ.40-க்கும், ரூ.11-க்கு விற்ற கொத்தவரை ரூ.22-க்கும், ரூ.20-க்கு விற்ற பச்சை பயிறு ரூ.50-க்கும் விற்பனையானது.

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT