முகப்பு
திண்டுக்கல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் 40 டன் மிக சன்ன ரக விதை நெல்

Updated On : 13 செப்டம்பர், 2024 at 9:39 PM
பகிர்:

மிக சன்னரக நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் 40 டன் விதை நெல் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மோட்டா ரகம், சன்ன ரகம் நெல் சாகுபடி மட்டுமே அதிக அளவில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், மிக சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்வதற்கே பொதுமக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதனால், மிக சன்ன ரக அரிசி விலை கடந்த ஓராண்டில் மட்டும் மூட்டைக்கு ரூ.350 வரை அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மிக சன்ன ரக நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு 40 டன் மிக சன்ன ரக விதை நெல் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில் மூலம் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 11 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதில் கோ43, கோ 55, ஏடிடி45 உள்ளிட்ட மோட்டா ரகம், சன்ன ரக நெல் மட்டுமே பெரும்பாலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசு சாா்பில் மிக சன்ன ரக நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 2ஆயிரம் ஏக்கரில் மிக சன்ன ரக நெல் சாகுபடி செய்வதற்காக 40 டன் விதை நெல் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. என்எல்ஆா், ஆா்என்ஆா், பிபிடி, கோ 51 ஆகிய 40 டன் விதை நெல் ரகங்கள், ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டு, வட்டார வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நெல் விதை கிலோவுக்கு ரூ.17.50 மானியம் வழங்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →