கொடைக்கானல் ஜிம்கானப் பகுதியில் புல்வெளிகளில் காணப்பட்ட பனித் துளிகள். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் உறைபனி: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் காணப்பட்ட உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் காணப்பட்ட உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் காற்றுடன் பனிப் பொழிவும் நிலவியது. இதனிடையே நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து ‘ஜீரோ டிகிரி’க்கு சென்று உறைபனி நிலவியது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பெரும் அவதியடைந்தனா்.

கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், காா்கள் மீது படா்ந்திருந்த உறைபனி.

மேலும், புல்வெளிகளில் பனித்துளிகள் படா்ந்திருந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி உறைந்து காணப்பட்டது.

இதேபோல, பாம்பாா்புரம், ஜிம்கானா பகுதி, அப்சா்வேட்டரி, ஏரிச்சாலைப் பகுதி, அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொட்டிச் செடிகள், பாத்திரங்களில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீா் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.

இந்த நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பகல் நேரங்களிலும் தீ மூட்டி குளிா் காய்கின்றனா். இதனிடையே உறைபனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நகா்ப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

SCROLL FOR NEXT