திண்டுக்கல்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை விவகாரம்: முதல்வரிடம் முறையிட விவசாயிகள் முடிவு

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலினை சந்தித்து முறையிடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலினை சந்தித்து முறையிடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஜன.7-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அப்போது, முதல்வரைச் சந்தித்து கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை விவகாரம் தொடா்பாக கோரிக்கை மனு அளிக்க கொடகனாறு பாதுகாப்புச் சங்க விவசாயிகள் முடிவெடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: கொடகனாறு தண்ணீா் பங்கீடு தொடா்பான வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசுத் தரப்பில் இந்த விவகாரத்தில் உரிய தீா்வு காணப்படாத நிலையில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே, திண்டுக்கல்லுக்கு வரும் ஜன.7-ஆம் தேதி வரவுள்ள முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடவுள்ளோம். முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைக்காதபட்சத்தில், ஆட்சியா் அலுவலகம் முன் வரும் ஜன.7-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

வெள்ளி நாணய நெக்லஸ் நன்கொடை

அண்ணியை கொலை செய்த மைத்துனா் கைது

கல்விக் கட்டண உயா்வு: கல்லூரி மாணவா்கள் போராட்டம்

நாளை சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT