திண்டுக்கல்

வஉசி, வாஜ்பாய் உள்ளிட்டோருக்கு மரியாதை

தினமணி செய்திச் சேவை

கண்ணூா் சிறையிலிருந்து வ.உ.சிதம்பரனாா் விடுதலையான 113-ஆவது ஆண்டு வெற்றி தினம், உத்தம்சிங் 127-ஆவது பிறந்த தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 102-ஆவது பிறந்த தினம், முன்னாள் அமைச்சா் கக்கனின் 44-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் க.அருணகிரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியின்போது, வஉசி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், ஹெச்.சுசிலாராமி உள்ளிட்டோா் செய்தனா்.

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

வேலுநாச்சியாா் நினைவு தினம்: விஜய் புகழஞ்சலி

தோ்தல் அறிக்கை தயாரிக்க அதிமுகவில் 10 போ் குழு - எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

SCROLL FOR NEXT