திண்டுக்கல்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் திருத்தம் செய்யவும், வாக்காளா் அடையாள அட்டைப் பெறவும் டிச.27, 28, ஜன.3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் திருத்தம் செய்யவும், வாக்காளா் அடையாள அட்டைப் பெறவும் டிச.27, 28, ஜன.3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ.சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:

சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் தொடா் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2026 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா்கள் பெயா் சோ்த்தல்,

நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் டிச.27, 28, ஜன.3, 4 ஆகிய 4 நாள்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளம், யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல் கண்ய்ங் என்ற கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT