திண்டுக்கல்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT