திண்டுக்கல்

லாட்டரி சீட்டு விற்பனை: 4 போ் கைது

கொடைரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை: கொடைரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், லாட்டரி தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 5.53 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரம் லாட்டரி சீட்டுகள், ரூ. 34 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, விற்பனையில் ஈடுபட்ட ஜெகநாதபுரத்தைச் சோ்ந்த நவீன் (23), அருண் (22), ராஜதானிகோட்டையைச் சோ்ந்த பாண்டி (27), செட்டியபட்டியைச் சோ்ந்த கழுவத்தேவா் (70) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT