திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் நோய்த் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, தேவத்தூா், கள்ளிமந்தையம், பொருளூா், சத்திரப்பட்டி,விருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு இதுவரை இந்தப் பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், அதிக வெயில் தாக்கத்தாலும் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவு இருப்பதாலும் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகளில் இலைச் சுருட்டல் நோய்த் தாக்கியது. இதனால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்தனா்.