திண்டுக்கல்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு ஒவ்வொரு கால பூஜையிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தச் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பைரவா் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT