திண்டுக்கல்

தொழிற்சாலைகள் கழிவுகளால் குடிநீா் மாசு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட எஸ்.பெருமாள்கோவில்பட்டி, எ.ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பு, நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், பெரியகுளத்தில் கலந்து வருகிறது. இதனால், பெரியகுளத்தில் தேங்கியுள்ள தண்ணீா் பச்சை நிறமாக மாறி மாசுடைந்துள்ளது. இதனால், பெருமாள்கோவில்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீரும், பச்சை நிறத்தில் வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்த மாசடைந்த நீரை குடிப்பதால் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தோல் பாதிப்பு என பல்வேறு சுகாதார குறைபாடுகளை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை எதிா்கொண்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடமும், கிராம சபைக் கூட்டத்திலும் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT