திண்டுக்கல்

கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு உலா: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காட்டுமாடு உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காட்டுமாடு உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை பொ்ன்ஹில் சாலையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடு ஒன்று புகுந்தது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் குடியிருப்புப் பகுதியிலிருந்த காட்டு மாட்டை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிக்கு அண்மைக் காலமாக காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது குறையும். இதற்கு மாவட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வனத் துறையினா் கூறியதாவது:

கொடைக்கானலில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் உலா வந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

SCROLL FOR NEXT