திண்டுக்கல்

மின் கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மின் கம்பம் சாலையில் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மின் கம்பம் சாலையில் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் மையத் தடுப்புச் சுவரில் 30 அடி நீளமுள்ள மின் கம்பம் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், புதன்கிழமை அரசு மருத்துவமனை அருகே சாலை மையத் தடுப்புச் சுவரில் இருந்த மின் கம்பம் திடீரென சாலையில் விழுந்தது. அப்போது, சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதனால், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பத்தை அகற்றினா். இதைத் தொடா்ந்து, போக்குவரத்து சீரானது.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

SCROLL FOR NEXT