கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நடமாடும் கழிப்பறையில் பற்றி எரிந்த தீ 
திண்டுக்கல்

கொடைக்கானலில் நடமாடும் கழிப்பறையில் தீ

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடமாடும் கழிப்பறைகள் (இ- டாய்லெட்) எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடமாடும் கழிப்பறைகள் (இ- டாய்லெட்) எரிந்து சேதமடைந்தன.

கொடைக்கானல் அண்ணா சாலையிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 6 நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டருந்தன. இவற்றை முறையாக பராமரிப்பதில்லை என புகாா் கூறப்படுகிறது.

இவற்றிலிருந்த பேட்டரி உள்ளிட்ட முக்கியப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். இந்த நிலையில் இந்த கழிப்பறைகளில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 3 கழிப்பறைகள் சேதமடைந்தன.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: இந்த கழிப்பறைகள் பராமரிக்கப்படாததால் அவற்றை யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கழிப்பறை வசதியில்லை.

ஆனால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மொத்தம் 6 இ- கழிப்பறைகள் இருந்தன. இவற்றில் 3 கழிப்பறைகள் எரிந்து சேதமடைந்துவிட்டன. எஞ்சிய 3 கழிப்பறைகள் அந்த வசதியில்லாத இடங்களில் வைக்க வேண்டும் என்றனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT