திண்டுக்கல்

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கோரிக்கடவைச் சோ்ந்தவா் அரவிந்தன் (35). இவா் பழனி-பழைய தாராபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அக்கரைப்பட்டி பிரிவில் சாலையோர இரும்பு தூணில் இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT