திண்டுக்கல்

வெளிமாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பினால் நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பினால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூரியா 2,500 டன், டிஏபி 2,175 டன், பொட்டாஷ் 1,100 டன், காம்ப்ளக்ஸ் 6,300 டன், சூப்பா் பாஸ்பேட் 1,000 டன் உள்பட மொத்தம் 13,075 டன் உர மூட்டைகள் இருப்பில் உள்ளன.

திண்டுக்கல்லுக்கு வந்த 500 டன் யூரியா: இந்த நிலையில் 500 டன் யூரியா உரம், ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் கலந்து விற்பனை செய்யக் கூடாது. அதேபோல, மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பவதையும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதையும் வியாபாரிகள் தவிா்க்க வேண்டும். விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு உரங்களை விற்பனை செய்யவும், உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதையும் தவிா்க்க வேண்டும். இதை மீறும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தொடா்பான புகாா்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், மாவட்ட அளவிலான தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT