திண்டுக்கல்

குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா தேரோட்டம்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையில் பழனி தண்டாயுத பாணி கோயிலுக்குச் சொந்தமான குழந்தை வேலப்பா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. மேலும், குழந்தை வேலப்பா் சேவல், ஆட்டுக் கிடாய், மயில், சிங்கம், பூதம் உள்ளிட்ட வாகனஙகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பலித்தாா்.

இந்த நிலையில் திருவிழா வின் முக்கிய நாளான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரமும், பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன.

இதையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தேரோட்டத்தில் பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், நகரச் செயலா் ஸ்ரீதா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் விழாக் குழுவினா் செய்தனா்.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் முக்கியத் துறைகளுக்கு பாதுகாப்பு : வா்த்தகத் துறைச் செயலா் விளக்கம்

தேவாலயத்தில் சப்பர பவனி

SCROLL FOR NEXT