கொடைரோடு அடுத்த மாலையகவுண்டன்பட்டி அருகே உள்ள பொட்டிக்குளம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலைக்கடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு மாலையகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா் பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா். சாா்பதிவாளா் சாந்தி முன்னிலை வகித்தாா்.
விற்பனையாளா் மாரிமுத்து வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலரும், வழக்குரைஞருமான சௌந்தரபாண்டியன் பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
இதில், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா்கள் அழகேசன், ஆரோக்கியம், திமுக நிா்வாகிகள் தேவநாதன், பெனிட், பதினெட்டாம்படியான் உள்பட பலா் கலந்து கொண்டனா். விற்பனையாளா் லட்சுமி நன்றி கூறினாா்.