மதுரை

ஆடி பெளர்ணமி: திருப்பரங்குன்றத்தில் பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து திங்கள்கிழமை வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெளர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஆடி பெளர்ணமியை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வரத்தொடங்கினர். மேலும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக பால்குடம், காவடி எடுத்து வந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும் ஆடி பெளர்ணமியை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியை சுவாமி, சத்திய கிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்க நிவாய் பெருமாள் சன்னிதிகளில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ஆடி பெளர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT