மதுரை

பால்குடம் எடுத்துச்சென்ற பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு

மதுரையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்துச் சென்ற பெண்ணிடம் 20 பவுன் நகையை பறித்துச் சென்றதாக புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்துச் சென்ற பெண்ணிடம் 20 பவுன் நகையை பறித்துச் சென்றதாக புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 மதுரை சொக்கலிங்க நகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி(46). பிளாஸ்டிக் பைப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி குமாரி(42). வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதன்கிழமை பால்குடம் எடுத்துச் சென்றார். புறவழிச்சாலை பாலம் வழியாக பழங்காநத்தம் வந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், குமாரி கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக குமாரி அளித்தப் புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT