மதுரை

ரூ.5.19 லட்சம் கையாடல்: புதுவாழ்வுத் திட்ட பெண் பணியாளர் மீது மோசடி வழக்கு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே ரூ.5.19 லட்சத்தை கையாடல் செய்ததாக புதுவாழ்வுத் திட்ட பெண் பணியாளர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே ரூ.5.19 லட்சத்தை கையாடல் செய்ததாக புதுவாழ்வுத் திட்ட பெண் பணியாளர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 பேரையூர் அருகே உள்ள அம்மாப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மனைவி செல்லாயி(35). இவர் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவின் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வசூல் செய்து வங்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சத்தை, புதுவாழ்வுத் திட்டப்பணியாளர் உஷாதேவி கையாடல் செய்துவிட்டதாக ஊரகக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்லாயி புகார் அளித்தார்.  இதேபோல, எம்.செங்குளத்தைச் சேர்ந்த கனகராஜ் மனைவி ஜெயலட்சுமி(35) அளித்தப்புகாரில், சுப்பலாபுரத்தில் உள்ள அரசு வங்கிக்கிளையில் இருந்து ரூ.2.94 லட்சத்தை உஷாதேவி கையாடல் செய்தததாக குறிப்பிட்டிருந்தார்.   இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க ஊரகக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன்பேரில், தே.கல்லுப்பட்டி போலீஸார், உஷாதேவி மீது மோசடி வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT