மதுரை

திருமங்கலம் அருகே சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

திருமங்கலம் அருகே சனிக்கிழமை பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்  ஆலம்பட்டி அருகே சனிக்கிழமை காலை கோவையிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு தென்காசி சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் மணப்பாறையைச் சேர்ந்த நீலமேகம் (23). கிளீனர் அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் (24). இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
லாரி கவிழ்ந்தவுடன் பெட்ரோல் கசிய ஆரம்பித்தது. இதையடுத்து, திருமங்கலம் மற்றும் டி. கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர். திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வாகனங்கள் திருமங்கலம், கள்ளிக்குடி வழியாக டி. கல்லுப்பட்டி சென்று ராஜபாளையம் சாலைக்கு திருப்பி விடப்பட்டன. இரவு 9 மணியளவில் லாரி மீட்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர்.
 இதனால் திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் சுமார் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT