மதுரை

குழாய்களில் கலங்கலான குடிநீர்: கிராம மக்கள் புகார்

DIN

மேலூர் நகராட்சி தெற்குப்பட்டி பகுதி தெருக் குழாய்களில் சேறும் சகதியுமாக கலங்கலான குடிநீர் ஞாயிற்றுக்கிழமை வந்ததாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலூர் நகராட்சியில், தெற்குப்பட்டி 25-ஆவது வார்டு பகுதியாகும். இங்குள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து தெருக் குழாய்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் காவிரி கூட்டுக் குடிநீரும் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீடு மற்றும் தெருக் குழாய்களில் சேறும், சகதியும் கலந்து கலங்கலான குடிநீர் வந்தது. மேல்நிலைத் தொட்டியை சரிவர சுத்தப்படுத்தாததே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடிநீர் வழங்கு குழாயில் எங்கேனும் கழிவுநீர் கலக்கிறதா என நகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT