மதுரை

மதுரை மாவட்டத்தில் 1,194 நீர்நிலைகளில் வண்டல்மண் அள்ள அனுமதி: அமைச்சர்

DIN

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 194 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு வண்டல்மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
 திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளிக்கொள்ள விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு)ரெகோபயாம் வரவேற்றார். வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண், களிமண் போன்றவைகளை ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலையில்லாமல் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 194 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 3 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு மண் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
  நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் எம்.ரமேஷ், வட்டாட்சியர் சரவணபெருமாள், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஐ.பி.எஸ். பாலமுருகன், என்.எஸ். பாலமுருகன், நிலையூர் முருகன், துணை வட்டாட்சியர்கள் குணசேகரன், தனசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருமங்கலம்: திருமங்கலத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கண்மாய்களில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. வட்டாட்சியர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT