முகப்பு
மதுரை

உசிலை. அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் சாவு

உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

     உசிலம்பட்டி வட்டம், போலிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரது மனைவி கவிதா (27). இவர், கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சல் குறையாததால், செவ்வாய்கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில்,  அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →