மதுரை

தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் செப்.10 இல் அந்தர்யோகம்

மதுரை அருகே தோப்பூரில் உள்ள சிவானந்த தபோவனத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அந்தர்யோகம் நடைபெறுகிறது.

DIN

மதுரை அருகே தோப்பூரில் உள்ள சிவானந்த தபோவனத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அந்தர்யோகம் நடைபெறுகிறது.
      இது குறித்து சிவானந்த தபோவனத்தின் தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது: சிவானந்த தபோவனத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தர்யோக பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி,  செப்டம்பர் 10 ஆம் தேதி காலை குருதேவர் சிவானந்தரின் 131 ஆவது ஜயந்தியை முன்னிட்டு, அந்தர்யோக பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
      தோப்பூரில் உள்ள சிவானந்த  தபோவன வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு அந்தர்யோகம் நிறைவடையும். தபோவனத் தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகிக்கிறார். திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் யதீஷ்வரி கிருஷ்ணாம்பாள் அம்பா முன்னிலையில், வழக்கமான முறைப்படி அந்தர்யோகம் நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT