தமிழ் புத்தாண்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவருக்கு தங்கக் கவசம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டான சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டான சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்படுகிறது.
முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தங்கக் கவசம் சாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.
மேலும், கருவறையில் உள்ள துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்படும்.
திருநகர் சித்தி விநாயகர் கோயில்: இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட திருநகர் சித்தி விநாயகர் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, விநாயகருக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், இளநீர்,திரவ்யாபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலும், அன்றைய தினம் சித்தி விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், கணக்கர் இதயராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.