லாரி மோதி சுமைப் பணியாளர் சாவு
ஆஸ்டின்பட்டி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுமைப் பணியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரைலாரி மோதி சுமைப் பணியாளர் சாவு
ஆஸ்டின்பட்டி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுமைப் பணியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆஸ்டின்பட்டி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுமைப் பணியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வளையங்குளத்தை அடுத்த எலியார்பத்தியைச் சேர்ந்த சுமைப் பணியாளர் பரமசிவம் (48). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை எலியார்பத்தியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கரடிபட்டிக்கு வந்துள்ளார். அதே நேரம், விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது.
ஆஸ்டின்பட்டி பிரிவு நான்குவழிச் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, பரமசிவம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பின்புறம் லாரி மோதியுள்ளது. இதில், பரமசிவம் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பரமசிவத்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.