முகப்பு
மதுரை

கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி ஊழியர்: வாடிப்பட்டியில் உறவினர்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட தனியார் பள்ளி ஊழியரை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட தனியார் பள்ளி ஊழியரை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாடிப்பட்டி பேட்டைப்புதூரைச் சேர்ந்த யோசனை மகன்  திருப்பதி(30). வாடிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்த நிலையில், பள்ளிக்கு பின்புறம் உள்ள வைகை பாசனக் கால்வாய்க்கு திருப்பதி குளிக்கச் சென்றார். தற்போது  வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் கால்வாயின் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடுகிறது. இதில் குளிக்கச்சென்ற திருப்பதி கால்வாயில் அடிச்செல்லப்பட்டார். 
இதுகுறித்து தகவறிந்த வாடிப்பட்டி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச்சென்று இரவு முழுவதும் கால்வாய் கரை வழியாகச்சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் திருப்பதியை காணவில்லை. இதற்கிடையில் அவரை மீட்பதில் போலீஸார் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, திருப்பதியின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வாடிப்பட்டி போலீஸார்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கால்வாய் செல்லும் பகுதிகளில் திருப்பதியே தேடி வருதாகவும் கிடைக்காத பட்சத்தில்,  கால்வாயில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைக்குமாறு ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.