துபையிலிருந்து காலணிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 592 கிராம் தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து மதுரை வந்த பயணி ஒருவர் காலணிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 592 கிராம் தங்கத்தை
துபையிலிருந்து மதுரை வந்த பயணி ஒருவர் காலணிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 592 கிராம் தங்கத்தை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபையிலிருந்து பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை மாலை மதுரை விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சுல்தான் ரிஸ்வான் சைமன் (35) என்பவர் காலணி சற்று உயரமாக இருப்பதை கவனித்த அதிகாரிகள் காலணியை வாங்கி சோதனை செய்தனர். அப்போது காலணியின் அடிப்பகுதியில் மண்துகள்களோடு தங்கத்தையும் சேர்த்து கட்டியாக்கி மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 592 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.18 லட்சமாகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.