முகப்பு
மதுரை

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உசிலம்பட்டி அணி சாம்பியன்

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உசிலம்பட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 15 மே, 2018 at 3:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உசிலம்பட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஹார்விபட்டி வின்னர் பாய்ஸ் ஜெகதீஸ் பிரபு நினைவு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட்' முறையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உசிலை கிளப் பாய்ஸ் அணியும், ஹார்விபட்டி வின்னர் பாய்ஸ் அணியும் மோதின. இதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் உசிலை பாய்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.
அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் முதல் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஹார்விபட்டி வின்னர் பாய்ஸ் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பறவை கிங்ஸ் ஸ்டார் அணியினர் மூன்றாம் இடத்தையும், ஏ.ஜெ.பி பிரதர்ஸ் அணியினர் நான்காம் இடத்தையும் பிடித்தனர். தொடர்நாயகன் விருதை உசிலம்பட்டி அணியைச் சேர்ந்த விக்கி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.