மதுரை

தேர்தல் செலவுகளை தாக்கல் செய்யாத 5  வேட்பாளர்கள் மீது வழக்கு

DIN

மதுரை மக்களவைத்தொகுதியில் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 வேட்பாளர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை வாக்குப்பதிவுக்குள் இரு முறை, தேர்தல் செலவின பார்வையாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் விதிமுறைகளில் உள்ளது. ஆனால் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜே.பாண்டியம்மாள், தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த என்.மாயழகன், சுயேச்சை வேட்பாளர் வி.சண்முகம், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அழகர், சுயேச்சை வேட்பாளர் அண்ணாத்துரை ஆகியோர் தேர்தல் செலவுக்கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் செலவுக்கணக்கு அதிகாரி கே.எஸ்.முத்துப்பாண்டியன் அளித்த புகாரின்பேரில்  5 வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT